மத்திய அரசு திடீர் முடிவு.. "பல லட்சம் பேர் வேலை இழக்க வாய்ப்பு" - கொதிக்கும் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள்

x

ஆன்லைன் விளையாட்டுகள், குதிரை பந்தையங்கள், சூதாட்ட விடுதிகள் மீது 28 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்க, ஜி.எஸ்.டி கவுன்சில் முடிவு செய்துள்ளது.

ஆன்லைன் நிறுவனங்கள் விதிக்கும் வாடிக்கையாளர் கட்டணங்கள் மீது மட்டும் ஜி.எஸ்.டி வரி விதிக்காமல்,

அவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் கட்டும் பந்தயய தொகைகள் மீதும் 28 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது ஆன்லைன் விளையாட்டு துறையை அழித்து விடும் என்றும் பல லட்சம் பேர் வேலை இழப்பார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆன்லைன் விளையாட்டுகளை, சூதாட்டங்களாக கருதுவது 60 ஆண்டு கால சட்ட நெறிமுறைகளுக்கு முரணானது என்று அகில இந்திய ஆன்லைன் விளையாட்டு கூட்டமைப்பின் தலைவர் ரோலண்ட் லாண்டர்ஸ் கூறியுள்ளார்.

ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் மொத்த வருமானத் தை விட அதிக அளவுக்கு வரி விதிப்பிற்கு இது வகை செய்வதால், இது இந்தத் துறையை அழித்து,

கள்ளத் தனமாக விளையாடுவதை ஊக்குவிக்கும் என்று இந்த கூட்டமைப்பின் செயலாளர் மலய் குமார் சுக்லா கூறுகிறார்.

28 சதவீதம் ஜி.எஸ்.டி என்பது இதுவரை விதிக்கப்பட்ட வரி விதிப்பின் அளவை விட 10 மடங்கு அதிகம் என்றார்.

இத்துறையில் இதுவரை செய்யப்பட்டுள்ள சுமார் 20,000 கோடி ரூபாய் அன்னிய முதலீடுகளை இது கடுமையாக பாதித்தும் என்கிறார் பேன்டசி விளையாட்டுகள் கூட்டமைப் பின் இயக்குனர் ஜாய் பட்டாச்சாரியா.

இந்தத் துறையில் இனி புதிய அன்னிய முதலீடுகள் செய்யப்படுவதை தடுக்கும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்