ரயிலில் அடிபடும் கால்நடைகளை - தடுக்க மத்திய அரசின் அதிரடி திட்டம் | Ashwini Vaishnaw
ரயிலில் அடிப்படும் கால்நடைகளை தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் வகுத்துள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
கால்நடைகள் ரயில்வே தண்டவாளங்களை கடப்பதால் ரயில்களுக்கு கடுமையான சேதம், தடம் புரண்டு தாமதம் ஏற்படும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அக்டோபர் முதல் ஒன்பது நாட்களில், 200 ரயில்களின் சேவை கால்நடைகளால் பாதிக்கப்பட்டது. இந்த ஆண்டு இதுவரை 4 ஆயிரம் ரயில்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த 6 மாதங்களில் காம்பவுண்ட் சுவர் கட்டப்படும் என்று ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். முதற்கட்டமாக ஆயிரம் கிலோமீட்டர் வரை காம்பவுண்ட் சுவர் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய அவர், அதன் மூலம் கால்நடைகளின் பிரச்சனைக்கு முழு தீர்வு கிடைக்குமா என கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
Next Story