"இதெல்லாம் நீங்க விற்கக்கூடாது..." - ஆன்லைன் விற்பனை நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ

x

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ஐ மீறுவதால், car seat belt alarm stopper clipகளை விற்பனை செய்யும் முதல் 5 இணைய வர்த்தக தளங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Amazon, Flipkart, Snapdeal, Shopclues மற்றும் Meesho ஆகியவற்றிற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கும் அலாரத்தை நிறுத்தும் car seat belt alarm stopper clip விற்பனை விவகாரம் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கடிதத்தின் மூலம் நுகர்வோர் விவகாரத் துறையின் ஆணையத்திற்கு தெரிய வந்தது. விற்பனை செய்யும் ஆன்லைன் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆலோசனை வழங்கவும் கோரப்பட்டது. அதன்படி அனைத்து car seat belt alarm stopper clipகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மோட்டார் வாகன உதிரிபாகங்களை நிரந்தரமாக நீக்குமாறு இணைய வர்த்தக தளங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுசார்ந்த சுமார் 13 ஆயிரத்து 118 பட்டியல்கள் வெவ்வேறு தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்