டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட 16 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு

x

டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 16 பேர் மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ.

காலை முதல் 8 மணி நேரத்தையும் கடந்து மணிஷ் சிசோடியா இல்லம் உட்பட 21 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தி வரும் நிலையில் வழக்கு பதிவு செய்தது.

புதிய கலால் வரிக் கொள்கையில் முறைகேடு நடந்ததாகவும் அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என டெல்லி துணைநிலை ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தின் அடிப்படையில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வரும் நிலையில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சிபிஐ.

இதில் முதல் குற்றவாளியாக டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்