CBI ஆபிஸில் உயிரை மாய்த்துக்கொண்ட குண்டுவெடிப்பு குற்றவாளி

மேற்கு வங்கத்தில் குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர், சிபிஐ அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x

பிர்பூம் மாவட்டம் போக்டி கிராமத்தில் கடந்த மார்ச் 21ஆம் தேதி, திரிணாமூல் காங்கிரஸ் நிர்வாகி வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இந்த வழக்கை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. குண்டு வெடிப்புடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ல‌லன் ஷேக் என்பவரை கடந்த 3ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் நரோட்டம்பூர் கிராமத்தில் கைது செய்த‌து. இதையடுத்து, 6 நாட்கள் அதைத் தொடர்ந்து 3 நாட்கள் காவலில் எடுத்து சிபிஐ விசாரித்து வந்த‌து. இந்நிலையில், சிபிஐ அலுவலகத்தில் உள்ள கழிவறையில் ல‌லன் ஷேக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து சென்ற ல‌லன் ஷேக்கின் உறவினர்கள், கதறி அழுதனர். அதே நேரத்தில் தற்கொலை குறித்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டு வெடிப்பில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியாக கருதப்படுபவர் சிபிஐ அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட‌து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்