ஓடை போல் சுருங்கிய காவிரி இது நம்ம காவிரியா?..அதிர்ச்சியில் மக்கள்

x

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஆயிரத்து 500 கன அடியாக இருந்த நிலையில் 350 கன அடியாக சரிந்துள்ளது. நீர்வரத்து குறைந்ததன் காரணமாக, பறந்து விரிந்த காவிரி ஆறு, சிறு ஓடை போல சுருங்கி, தண்ணீர் ஆங்காங்கே குளம் போல் தேங்கி நிற்கிறது. தண்ணீர் வரத்து இல்லாத காரணத்தால் ஆற்றுப்பகுதி பாறைகளாக காட்சியளிக்கிறது. மேலும், ஒகேனக்கல் மெயின் அருவி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் குறைந்த அளவே கொட்டி வருகிறது .


Next Story

மேலும் செய்திகள்