சாதி வாரி கணக்கெடுப்பு - உச்சநீதிமன்றம் போட்ட உத்தரவு | Supreme Court
பீகாரில் நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது.பீகாரில் நடைபெற்று வரும் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் கடந்த 4-ஆம் தேதி விதித்த இடைக்கால தடையை நீக்க கோரி மேல் முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த மனுவை,
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ். ஒகா, ராஜேஷ் பிந்தல் அமர்வு விசாரித்தது. அப்போது பீகார் அரசின் சார்பில், சட்டப்பேரவையின் அதிகாரத்தில் பாட்னா உயர்நீதிமன்றம் தலையிட்டுள்ளது என்றும், சாதிவாரியான ஆய்வு நடைபெறுகிறதே தவிர கணக்கெடுப்பு நடைபெறவில்லை என்றனர். எனவே தடையை நீக்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. வாதத்தை நிராகரித்த உச்சநீதிமன்றம், சாதி வாரி கணக்கெடுப்புக்கு பாட்னா உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடை இடைக்காலத்திற்கானது என தெரிவித்தது. இது தொடர்பான ரிட் மனுவை மீண்டும் ஜூலை 3-ஆம் தேதி விசாரிக்க உள்ளது. அன்றைய நாளில் பீகார் மாநில அரசு ஆஜராகி வாதிடலாம் என தெரிவித்து மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.