ஜாதி மறுப்பு திருமண விவகாரம்...தீண்டாமை செயல் நடைபெறுகிறதா..? - ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

x

திருச்சி புலிவலம் கிராமத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். விழா கமிட்டி குழுவினர் தன்னையும், தனது குடும்பத்தினரையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், கோயிலுக்குள் வழிபடவிடாமல் மிரட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளார். விதவை திருமணம் செய்த சிலரையும் வழிபாட்டுக்கு அனுமதிக்காமல், தீண்டாமை செயலில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி ராஜா, ஆர் சுப்பிரமணி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் கிராமத்தில் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை கோயில் வழிபாடு செய்யவிடாமல் தீண்டாமை செயல் நடைபெறுகிறதா? என்பது குறித்து ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை 28ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்