மிரளவிட்ட குறவர் இன மக்கள்... விடிய விடிய வேலை செய்த அதிகாரிகள்
- திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குறவர் இன மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால், இரவு நேரத்திலும் அதிகாரிகள் பணி செய்தனர்
- . நேற்று காலை தொடங்கிய போராட்டம், நள்ளிரவிலும் தொடர்ந்ததால், வட்டாட்சியர் அலுவலகத்திலேயே சமைத்து சாப்பிட்டு, உறங்கினர்.
- இதையடுத்து, அவர்களது ஆவணங்களை உடனடியாக ஆய்வு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
- இதனால், திருப்பத்தூர், நாட்டறம்பள்ளி, வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில், நள்ளிரவிலும் குறவர் இன மக்களின் வீடுகளுக்கு சென்று வட்டாட்சியர்கள் ஆய்வு செய்தனர்.
- இதனால், போராட்டத்தை கைவிட்டு வீட்டுக்கு சென்ற குறவர் இன மக்கள், மீண்டும் இன்று காலை வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story