மரண தண்டனை நடைமுறை தொடர்பான வழக்கு.. - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் ரிஷி மல்கோத்ரா உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மரண தண்டனையை வலியற்ற முறையில் நிறைவேற்ற வேண்டுமென 1967ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை முன்வைத்து மனுதாரர் தரப்பு வாதம் செய்தது. மரண தண்டனையை தூக்கிலிட்டு நிறைவேற்றாமல் வலியற்ற முறையில் நிறைவேற்றுவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி, இது தொடர்பாக நிபுணர் குழுவை அமைக்கவும் ஆணையிட்டார்.
Next Story