அதிமுக முன்னாள் MLA மீது வழக்கு பதிவு

x

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன், அவரது மனைவி, மாநகராட்சி கவுன்சிலரான மகள் உள்ளிட்ட நான்கு பேர் மீது, 33 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் அருகே புத்தேரி பகுதியில் நிலம் தருவதாக கூறி 33 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ., நாஞ்சில் முருகேசன், அவரது மனைவி தங்க தேவிகா, மகள் நாகர்கோவில் மாமன்ற உறுப்பினரான ஸ்ரீலிஜா மற்றும் நாகர்கோவில் ஜோஸ்வா தெருவை சேர்ந்த பினோ தேவகுமார் ஆகிய நான்கு பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புத்தேரி பகுதியை சேர்ந்த பொறியாளர் செந்தில்குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 2 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நாஞ்சில் முருகேசனிடம் 75 லட்ச ரூபாய் மதிப்பிலான நிலம் வாங்குவதற்காக இரண்டு தவணையாக 33 லட்ச ரூபாய் கொடுத்ததாகவும், அதன் பின்பு மீத தொகையை செலுத்தி நிலத்தை வாங்க முயற்சித்த போது, காலம் தாழ்த்தி ஏமாற்றி வந்ததாக புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்