'மாமன்னன்' படத்திற்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள மாமன்னன் திரைப்படத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், உதயநிதி ஸ்டாலினை வைத்து ஏஞ்சல் என்ற படத்தை 80 சதவீதம் எடுத்துவிட்டதாகவும், 20 சதவீதம் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த சூழலில், மாமன்னன் படம்தான் கடைசி படம் என உதயநிதி கூறியதை சுட்டிக்காட்டிய மனுதாரர், ஒப்பந்தப்படி, எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் புறக்கணித்து வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் எஞ்சிய படப்பிடிப்பை முடித்து தர வேண்டும், அப்படி இல்லாவிட்டால் 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க உதயநிதிக்கு உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Next Story