நடுக்கடலில் பற்றி எரிந்த கார்கள்...உடல் கருகி பலியான இருவர்..

x

இத்தாலியில் இருந்து 1200 கார்களை கொண்டு வந்த சரக்குக் கப்பல் ஒன்று, அமெரிக்காவில் நியூஜெர்சி துறைமுகத்தை சென்றடைந்தது. இந்நிலையில் கப்பலின் பத்தாவது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக விரைந்த தீயணைப்பு துறையினர், பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். துரதிருஷ்டவசமாக 2 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த நிலையில், 5 வீரர்கள் காயம் அடைந்தனர். தொடர்ந்து 11 மற்றும் 12வது தளங்களிலும் தீ பரவி உள்ளதால், தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் கடுமையாக போராடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்