காரை கடத்த புது டெக்னிக் பயன்படுத்தி வசமாக சிக்கிய திருடர்கள்

x

காரை கடத்த புது டெக்னிக் பயன்படுத்தி வசமாக சிக்கிய திருடர்கள்


சென்னையில் நூதன முறையில் காரை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய அரியானாவைச் சேர்ந்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த மோகன் அயானி என்பவர், ஆந்திர மாநிலம், செகந்திராபாதில் உள்ள தனது மருமகனுக்கு காரை அனுப்பி வைப்பதற்கு ஆன்லைன் மூலம் டிரைவரை தேடியுள்ளார். அப்போது, கார் ஏஜென்சி நடத்துவதாக கூறி அறிமுகமான 2 அரியானா இளைஞர்கள், காரை பத்திரமாக கொண்டு சேர்ப்பதாக கூறி, கடந்த மாதம் 23-ஆம் தேதி காரை ஓட்டிச் சென்றனர். இரண்டு நாட்கள் ஆகியும் அவர்கள் காரை கொண்டு சேர்க்காததால் சந்தேகம் அடைந்த மோகன் சயானி, சம்பந்தப்பட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியதற்கு, நிறுவனத்தில் இருந்து பேசியவர்கள், மேலும் 76 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். பணத்தை தராவிட்டால், காரை விற்று விடுவதாகவும் அவர்கள் மிரட்டி உள்ளனர். இதையடுத்து, மோகன் சயானி அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார், சம்பந்தப்பட்ட 2 பேரையும் பெங்களூரில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரை பறிமுதல் செய்து விசாரித்தபோது, அவர்கள் 7 பேரை ஏமாற்றி பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்