சாலை கடக்கும் போது சட்டென நின்ற பைக்.. கார் மோதியதில் குழந்தையுடன் பறந்த தாய்.. தலையை பிடித்துக்கொண்டு நின்ற பெண்-பதறவைக்கும் காட்சி
கேரளாவில் சாலையை கடக்க முயன்ற இரு சக்கர வாகனத்தின் மீது கார் மோதியதில், பதைபதைப்பை ஏற்படுத்தும் சிசிடிவி வெளியாகியுள்ளது. கண்ணூர் மாவட்டம் பாப்பினச்சேரி நெடுஞ்சாலையில் மகளுடன் தாய் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, சாலையை கடக்க முயன்ற அவர்களின் வாகனம் மீது கார் மோதியதில், வாகனத்துடன் இருவரும் தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில், இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், பதற வைக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
Next Story