கலர் மாறும் கார் முதல் ஸ்மார்ட் கழிவறை வரை.. உலகை மாற்ற வரும் புதிய கண்டுபிடிப்புகள்

கலர் மாறும் கார் முதல் ஸ்மார்ட் கழிவறை வரை.. உலகை மாற்ற வரும் புதிய கண்டுபிடிப்புகள்
x

CES எனும் தொழில்நுட்ப நுகர்வோர் கூட்டமைப்பின் வருடாந்திர தொழில்நுட்ப கண்காட்சி அமெரிக்காவில் அண்மையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

அடுத்து வரும் ஆண்டுகளில், உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் பல்வேறு புதிய தொழில்நுட்பங்களை பல நிறுவனங்களும் இதில் காட்சிப்படுத்தின. இதில், ஆச்சரியப்படுத்தும் சில புதிய சாதனங்கள் பற்றி சிறப்பு செய்தியாளர் ரஞ்சித் வழங்கிய தகவல்களைப் பார்க்கலாம்.காட்சிகளை கண் முன் நிறுத்தும் 3டி திரைப்படங்கள் தரும் அனுபவம் அலாதியானது. மிகுந்த பொருட்செலவில் தயாராகி எப்போதாவது வெளிவரும் திரைப்படங்களை பார்க்க, பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். திரையரங்கில் பிரத்யேக கண்ணாடி அணிந்து மட்டுமே பார்க்க கூடிய, 3டி தொழில்நுட்பத்தை ASUS நிறுவனம் வீட்டுக்கே கொண்டுவரவுள்ளது. இந்நிறுவனம் கலர் மாறும் கார் முதல் ஸ்மார்ட் கழிவறை வரை.. உலகை மாற்ற வரும் புதிய கண்டுபிடிப்புகள்அறிமுகப்படுத்த உள்ள புதிய லேப்டாப்பில், கண்ணாடி அணியாமலேயே, 3டி காட்சிகளை பார்த்து ரசிக்க முடியும்.


Next Story

மேலும் செய்திகள்