புற்றுநோய், இதய நோய்களுக்கு 2030-க்குள் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் - மாடர்னா

x

2030 ஆம் ஆண்டுக்குள் புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கு தடுப்பூசி பயன்பாட்டு வரும் என அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான மாடர்னா தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான உயிரை குடிக்கும் புற்றுநோய், இதய நோய்களுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு தொடர்ந்து வருகிறது. இந்த ஆய்வில் அமெரிக்கா முன்னணி மருந்து தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான மாடர்னா, எம்.ஆர்.என்.ஏ. அடிப்படையில் இந்த நோய்களுக்கு தடுப்பூசி தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டுகிறது. கொரோனா வைரசுக்கு இந்த முறையில் தடுப்பூசி தயாரித்து வெற்றிக்கண்ட மார்டானா, புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பிற அரிதான நோய்களுக்கு தடுப்பூசி தயாரிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்கான தடுப்பூசி வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டு வரும் என கூறியிருக்கும் மாடர்னா தலைவர் பால் பர்டன், இந்த தடுப்பூசியால் மில்லியன் கணக்கான உயிரை காக்கலாம் என தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்