"இந்த நிலைமைல உன்ன பாக்க முடியலமா".. மகளை கொன்று தூக்கில் தொங்கிய அப்பா

x

வேலூர் மாவட்டத்தில் மனநலம் பாதித்த மகளை கொலை செய்து விட்டு, தந்தையும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கே.வி.குப்பம் அடுத்த பெருமாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த, பாபு, வேண்டாலட்சுமி தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், இவர்களது இரண்டாவது மகள் தனுஜா, பிறவியிலிருந்தே மனநலம் பாதித்தவர் என கூறப்படுகிறது கடந்த சில தினங்களாக மன நலம் பாதித்த மகளின் நிலையை நினைத்து, பாபு விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மனநலம் பாதித்த தனது மகளை, பாபு கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, கழிவறையில் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து வந்த கே.வி.குப்பம் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்