ஜாமின் கொடுக்கலாமா? வேண்டாமா?.. சாட்ஜிபிடியை நாடிய நீதிமன்றம் - 'என்ன தீர்ப்பு கொடுத்து இருக்கும்..?'
டெக் உலகில் அதிகம் பேசப்பட்டும் சாட்ஜிபிடியை தற்போது நீதிதுறையும் கையில் எடுத்திருப்பது இணையத்தில் கலவையான விமர்சனங்களுக்கு காரணமாகியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு கொடூரமாக கொலை செய்த காரணத்திற்காக கைதாகி இருந்த இளைஞர் தொடுத்திருந்த ஜாமின் வழக்கில், அவருக்கு ஜாமின் வழங்குவது தொடர்பாக பஞ்சாப் நீதிமன்றம் சாட்ஜிபிடியை அணுகியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. ஆனால் உலகளவில் இது போன்ற குற்றம் புரிந்தோருக்கு வழங்கப்படும் தண்டனை குறித்த கண்ணோட்டத்தை அறிந்து கொள்ளவே சாட்ஜிபிடி பயன்படுத்தப்பட்டதாக நீதிபதி விளக்கமளித்தார்.
Next Story