வல்லரசு நாட்டிற்கே இந்த கதியா... - 84 ஆயிரம் கோடியை இழந்த அமெரிக்கர்கள்... - படிச்சிருந்தும் பிரயோஜனம் இல்லையே...
ஆன்லைன் மோசடிகள் மூலம் அமெரிக்க குடிமக்கள், 2022இல் அமெரிக்க குடிமக்கள் 84 ஆயிரத்து 466 கோடி ரூபாய் வரை இழந்துள்ளதாக அமெரிக்க புலனாய்வுத் துறை எஃப்.பி.ஐ தெரிவித்துள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சட்டவிரோத அமைப்புகளின் கால்சென்டர்கள் மூலம் 25 ஆயிரக் கோடி ரூபாய் வரை அமெரிக்கர்கள் இழந்துள்ளதாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது.
ஆன்லைன் மோசடிகள் மூலம் அமெரிக்க குடிமக்கள் இழந்த தொகை 2021இல் 57 ஆயிரத்து138 கோடி ரூபாயாக இருந்து,
2022 ஜனவரி முதல் நவம்பர் வரை 84 ஆயிரத்து 466 கோடி ரூபாயாக 47 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஆன்லைன் மூலம் அறிமுகமாகி, காதலிப்பதாக கூறி மோசடி செய்யும் கும்பல்கள் மூலம் அமெரிக்கர்கள் இந்த ஆண்டில் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் இழந்துள்ளனர்.
தொழில்நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகளை களவாடி, அதன் மூலம் நடத்தப்பட்ட மோசடிகளில்19 ஆயிரத்து 874 கோடி ரூபாய் இழந்துள்ளனர்.