அரசு மருத்துவமனையின் நுழைவாயில் மீது மோதிய சுற்றுலா பேருந்து - அலறியடித்து ஓடிய சுற்றுலா பயணிகள்
கன்னியாகுமரி அரசு மருத்துவமனை நுழைவாயிலில், சுற்றுலா பேருந்து மோதியதால் பரபரப்பு ஏறட்டது. கர்நாடகாவிலிருந்து 50 பயணிகளுடன் வந்த சுற்றுலா பேருந்து, ஒன்று, எதிர்பாராத விதமாக கன்னியாகுமரி அரசு மருத்துவமனை நுழைவு வாயிலில் மோதி விபத்துக்குள்ளானது.
இதனால், பேருந்தில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மின்சார துறை ஊழியர்கள், ஜேசிபி இயந்திரம் மூலம் நுழைவு வாயிலின் ஒரு பகுதியை அப்புறப்படுத்தி பேருந்தை மீட்டனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
Next Story