"நாயகன் மீண்டும் வரான்"... தீவிர பயிற்சி செய்யும் போட்டோவை வெளியிட்ட பும்ரா.. ரசிகர்கள் உற்சாகம்

x

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மீண்டும் பயிற்சியை தொடங்கியுள்ளார். முதுகுத் தண்டுவடப் பகுதியில் காயம் அடைந்த பும்ரா, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கவில்லை. கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட பும்ரா, காயத்தில் இருந்து குணமடைந்து வந்த நிலையில் நெட்ஸில் தற்போது பயிற்சியை தொடங்கி உள்ளார். இதனால் அடுத்த மாதம் நடைபெறவுள்ள அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் பும்ரா இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்