மாடர்ன் டிரஸ் போட்ட மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கொடூர கணவன் - கன்னியாகுமரியில் பயங்கரம்
தக்கலை அருகே மூலச்சல் பகுதியை சேர்ந்தவர் ஜெபபிரின்ஸ். இவருக்கும் அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்த எபனேசர் என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், ஜெபபிரின்ஸ் மாடர்ன் உடை அணிந்து திருவனந்தபுரம் அருகே டியூசன் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெபபிரின்ஸின் சகோதரரின் திருமண நிச்சயதார்த்திற்காக சென்று இருவரும் இருசக்கரவாகனத்தில் திரும்பியுள்ளனர்.
அப்போது மணலி அருகே வரும் போது மாடர்ன் உடை அணிந்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் எபனேசர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெபபிரின்ஸை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் நடைபெற்ற இடத்திலிருந்து தப்பி சென்ற எபனேசர், விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து எபனேசர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வரும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.