தம்பியை கொடூரமாக கொன்று உடலை மறைக்க அண்ணன் போட்ட திட்டம் - அதிர்ச்சி சம்பவம்
- திருவண்ணாமலை அருகே சொத்து பிரச்சனையில் தம்பியை கொலை செய்து, கழிவு நீர் தொட்டியில் போட்டு மூடிய அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
- கீழ்குப்பத்தை சேர்ந்த அண்ணன் தம்பிகளான, ஏழுமலை மற்றும் திருமலையிடையே சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது.
- இந்த நிலையில் திருமலை ஏழுமலையிடம் வீட்டு பத்திரத்தை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியத்தில், குடிபோதையில் இருந்த ஏழுமலை, தனது தம்பியை தாக்கியுள்ளார்.
- இதில் திருமலை உயிரிழக்கவே, அவரது உடலை காலியான கழிவு நீர் தொட்டியில் போட்டு மூட ஏழுமலை முயற்சித்துள்ளார்.
- ஆனால் போதையில் தொட்டியை ஒழுங்காக மூடாததால், உடலை கண்டவர்கள் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
- இதனையடுத்து விசாரணயில் இறங்கிய போலீசார், ஏழுமலையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story