ஏரியில் மூழ்கி அண்ணன், தம்பி 3 பேர் பலி - திருவண்ணாமலையில் அதிர்ச்சி சம்பவம்
ஏரிக்கு குளிக்கச் சென்ற அண்ணன், தம்பி உள்பட மூன்று பள்ளி மானவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், லாடவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணதாசன்.
இவரது மகன்கள் அருள், சந்திப், ஜீவன்குமார் ஆகியோர் அரசு பள்ளியில் பயின்று வந்தனர்.
இவர்கள் மூவரும் அருகில் உள்ள கங்கநல்லூர் ஏரிக்கு குளிக்கச் சென்றனர்.
சிறுவர்கள் ஏரிக்கு குளிக்க சென்றது பெற்றோருக்கு தெரியாது எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறுவர்களுக்கு நீச்சல் தெரியாத காரணத்தால், மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ஏரியில் இருந்து சடலமாக சிறுவர்களை மீட்டனர்.
ஏரியில் மூழ்கிய மற்றொருவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
Next Story