மருத்துவமனை வந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்த சகோதரன் - கோபத்தில் மருத்துவரை தாக்கிய சகோதரர்கள்

x

சென்னை எம்ஜிஆர் நகரை சேர்ந்த திருமலைஉதயம் என்பவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் அவரை கேகே நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை அளிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே அவர் உயிரிழந்ததால் கொதித்துப்போன அவரின் சகோதரர்கள் 3 பேர் மருத்துவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி மருத்துவமனை தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல் தங்கள் சகோதரருக்கு உரிய சிகிச்சை அளிக்காததே அவரின் மரணத்துக்கு காரணம் என்பதால் உரிய நடவடிக்கை கோரி திருமலை உதயத்தின் தரப்பும் புகார் அளித்திருக்கும் நிலையில் கே.கே.நகர் போலீசார் இரு தரப்பு புகார்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்