அண்ணன் - தங்கையாக பழகிய உறவு... தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர்
அண்ணன் - தங்கையாக பழகிய உறவு... குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தனிமையில் இருந்ததை வீடியோ எடுத்து மிரட்டிய இளைஞர் - கன்னியாகுமரியில் பயங்கரம்
மனவாளக்குறிச்சி அருகே கொல்லன்விளை பகுதியை சேர்ந்தவர் பிபின் பிரியன். இவருக்கு காதல் திருமணமாகி 3 குழந்தைகள் உள்ள நிலையில், இளம் பெண் ஒருவரிடம் அண்ணன் - தங்கை உறவு முறையில் பழகி வந்துள்ளார். தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வரும் அப்பெண்ணை காரில் அழைத்து சென்ற பிபின் பிரியன், மயக்க மருந்து கலந்த குளிர்பானம் கொடுத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை வீடியோவாக பதிவு செய்து பெண்ணுக்கு மிரட்டல் விடுவித்த நிலையில், அதிர்ச்சியடைந்த பெண் போலீசில் புகாரளித்தார். இது குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரும் போலீசார், தலைமறைவான இளைஞர் பிபின் பிரியனை தேடி வருகின்றனர்.