மோதலில் தாயை தாக்கிய மூத்த சகோதரரால் பரபரப்பு - நிலைகுலைந்து தாய் பலியான சோகம்
மோதலில் தாயை தாக்கிய மூத்த சகோதரரால் பரபரப்பு - நிலைகுலைந்து தாய் பலியான சோகம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் பாக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வேலம்மாள். இவருக்கு ஒரு மகளும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த சில நாட்களாக தங்கள் குடும்பக் கடனான 16 லட்சம் ரூபாயை அடைப்பதில் இரு மகன்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது. இதில் மூத்த மகன் சுரேஷ்குமார் தன்னால் கடனையெல்லாம் அடைக்க முடியாது என கூறியதால், இவருக்கும் இளைய மகன் வேல் முருகனுக்குமிடையே தகாரறு ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் மூத்த மகன் சுரேஷ், தாயாரின் தலையில் தடியால் அடித்ததில் அவரது தாய் நிலைகுலைந்து உயிரிழந்தார். உடனே இது குறித்து அவர்களது சகோதரி கீழ்குப்பம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு, இரு சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவி உட்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.