உக்ரைன் சென்றார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் | britain | rishi sunak | thanthi tv
பிரிட்டன் பிரதமராக பதவியேற்றதற்குப் பிறகு ரிஷி சுனக் முதன்முறையாக உக்ரைன் சென்றுள்ளார். தலைநகர் கீவில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை சந்தித்த அவர், போர் குறித்து விவாதித்தார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெலென்ஸ்கி, போரின் முதல் நாளில் இருந்தே உக்ரைனும் பிரிட்டனும் வலிமையான நட்புடன் இருப்பதாகவும், இந்த சந்திப்பில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாகவும் தெரிவித்தார். இது குறித்து கருத்து தெரிவித்த சுனக், சுதந்திரத்திற்கு போராடுவதென்றால் என்னவென்று நன்கு அறிந்த பிரிட்டன் நிச்சயம் எல்லா வழிகளிலும் உக்ரைனுடன் துணை நிற்கும் என்று உறுதியளித்தார். அத்துடன், உக்ரைனுக்கு 489 கோடி ரூபாய் மதிப்பிலான வான் பாதுகாப்பு உதவிகளையும் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
Next Story