90ஸ்களை கவர்ந்த மம்மி பட ஹீரோ..எடை வைத்து கிண்டல் செய்த உலகம்..அதை வைத்தே 'ஆஸ்கர்' வென்ற ஹீரோ |Oscar

x

Brendan Fraser... The Mummy , Journey to the Center of the Earth போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ்நாடு வரை பிரபலமானவர்... அதிலும் 90களில் பிறந்த குழந்தைகளுக்கு Brendan Fraser என்றால் மிகவும் பிரியம்... குழந்தைகளைக் கவரும் பல சாகச திரைப்படங்களில் நடித்தவர்... மளமளவென ஏறிய இவரது திரை வாழ்க்கை, பல அறுவை சிகிச்சைகளால் நிலைகுலைந்து போனது... அதுவும் கூட தன் ரசிகர்களை மகிழ வைக்க வேண்டுமே என்பதற்காக ஸ்டண்ட் செய்யும் போது ஏற்பட்ட அடிகளுக்காகத் தான் அதிக அறுவை சிகிச்சைகள்... ஆனால் அதன் பிறகு ப்ரெண்டனின் உடல் தோற்றம் மாறத் துவங்கியது... திடீரென அவர் எடை அதிகரித்தது அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்தது... கட்டுக்கோப்பான உடலுடன் இருக்கையில் இவரை ஆணழகன் என போற்றிய இதே உலகம் தான் எடை கூடியதால் சகட்டு மேனிக்கு தூற்றியது... எவ்வளவோ வலிகளைக் கடந்து, மீண்டும் அவர் நடித்த திரைப்படமான தி வேல் தான் ப்ரென்டனுக்கு ஆஸ்கரைத் தந்துள்ளது... ஆனால் எதை வைத்து இந்த உலகம் இவரைக் கிண்டல் செய்ததோ, அதை வைத்தே சாதித்துக் காட்டியுள்ளார் ப்ரெண்டன்... 600பவுண்ட் எடை உள்ள மனிதனைப் போன்ற தோற்றத்துடன், தி வேலில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி தன்னை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்... படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ப்ரெண்டனின் கதாபாத்திரம் பதிந்து விடும்... அப்படி ஒரு எதார்த்தமான நடிப்பு... தந்தை-மகளுக்கிடையேயான பாசப்பிணைபான காட்சிகள் வரும் இடங்களிலெல்லாம் கண்ணீர் வராமலில்லை... ஆஸ்கரையும் தட்டித் தூக்கிய Brendan Fraser நிஜத்திலும் ஹீரோதான்...


Next Story

மேலும் செய்திகள்