ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி...ஒலித்த அலாரம்... ஓட்டம் பிடித்த திருடன்
ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயற்சி...ஒலித்த அலாரம்... ஓட்டம் பிடித்த திருடன் - பரபரப்பு சிசிடிவி காட்சிகள்
மதுரையில் நள்ளிரவில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
பரவை பகுதியில் உள்ள வங்கி ஏடிஎம்மிற்கு நள்ளிரவில் ஹெல்மெட் அணிந்தபடி சென்ற ஒருவர் பணத்தை திருட முயன்றார்.
ஆனால் அங்கிருந்த அலாரம் திடீரென ஒலித்ததால் பதறிப்போன அவர், அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் அந்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story