#BREAKING | "மக்களின் வரி பணம் வீணடிக்கப்படுகிறது.." - ரிட்டையர்டு ஆனவருக்கு நீதிமன்றம் வைத்த குட்டு

x

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை முன்னாள் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நேரில் ஆஜர்.

நீதிபதி சாரமாரி கேள்வி.

நீதிமன்ற உத்தரவை முறையாக பின்பற்றி இருந்தால் வட்டி என்ற பெயரில் மக்களின் வரி பணம் வீணடிக்கப்பட்டு இருக்காது - உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி வேதனை.

பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு 6% வட்டியுடன் பணம் திருப்பி செலுத்துவது யாருடைய பணம் அரசின் பணம் மக்களின் வரி பணம் மக்களின் வரி பணத்தை விரயம் செய்த அரசு அதிகாரிகள் மீது ஏன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக் உத்தரவிட கூடாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கேள்வி

மதுரை சேர்ந்த ராஜேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது:-

எனது தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளித்ததற்கான உரிய தொகையை அரசு ஊழியருக்கான இன்சூரன்ஸ் தொகையிலிருந்து எனக்கு வழங்கும்படி விண்ணப்பித்தேன் எனது மனு நிராகரிக்கப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 2017 ஆண்டு உயர்நீதிமன்ற வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு உரிய மருத்துவ தொகையை எங்களுக்கு 6% வட்டியுடன் அளிக்கும்படி 2019 ஆண்டு உத்தரவிட்டது. ஆனாலும் அந்த உத்தரவு முறையாக நிறைவேற்றப்படவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.என கடந்த 2021 ஆண்டு தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் மதுரை முன்னால் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் IAS உள்ளிட்ட அதிகாரிகள் ஆஜரானார்கள்.

பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி மனுதாரர் தரப்பினருக்கு கோர்ட்டு உத்தரவின்படி உரிய தொகை வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது குறிப்பிட்ட நீதிபதி, 2019 ஆம் ஆண்டில் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தற்போது மனுதாரருக்கு எவ்வளவு தொகை வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் 6% வட்டியாக செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

இந்த பணம் யாருடைய பணம் அரசு அதிகாரி தனது சொந்த பணத்தை செலுத்தினாரா அல்லது மக்களின் வரிப்பணத்தை வட்டியாக செலுத்தினாரா கோர்ட்டு உத்தரவு பிறப்பித்த உடனே செலுத்தியிருந்தால் இந்த வட்டி தொகையை தற்போது செலுத்த தேவையில்லை.

மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட அதிகாரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்ட பின்பு அவசர அவசரமாக நேற்று 6% வட்டியுடன் சேர்த்து இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த 6% வட்டி 9 ஆயிரம் ரூபாய் மக்களின் வரிப்பணம் இது அரசின் வீணாக வட்டி என்ற பெயரில் செலவு விடப்படுகிறது. இதற்கு அதிகாரிகள் தான் காரணம் இது போன்ற அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க தலைமைச் செயலாளருக்கு ஏன் உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேள்வி எழுப்பினார்.

பின்னர் இது தொடர்பாக விரிவாக உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று கூறி விசாரணையை ஒத்தி வைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்