#Breaking|| அடுத்த பரபரப்பு.. குட்கா வழக்கு.. சிபிஐ மீண்டும் அதிர்ச்சி தகவல்

x

குட்கா முறைகேடு வழக்கில் விசாரணைக்கு அனுமதி மற்றும் குற்றப்பத்திரிகை தாக்கல் தொடர்பாக அனுமதி கடிதம் கிடைக்கவில்லை என சிபிஐ 11ஆவது முறையாக சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தகவல்

விசாரணை ஆகஸ்ட்11 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு

தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் விற்கபட்டதாக எழுந்த புகாரில் டில்லி சிபிஐ வழக்கு

மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகியோருக்கு எதிராக கடந்த 2021 ஆண்டு சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

வழக்கில், முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தாக்கல் செய்த கூடுதல் குற்றப்பத்திரிக்கையில் பிழைகள் உள்ளதால் சிபிஐ நீதிமன்றம் கடந்த ஆண்டு திருப்பி அளித்தது

விசாரணை தொடர்பான அனுமதி கடிதம் கிடைத்ததா? என சிபிஐக்கு நீதிபதி கேள்வி

கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான மத்திய அரசு அனுமதி கடிதம் இன்னும் தங்களுக்கு கிடைக்கவில்லை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கூடுதல் கால கூடுதல் வேண்டும் - சிபிஐ


Next Story

மேலும் செய்திகள்