#Breaking|| “தமிழ் மீது இந்தியை திணிக்க முடியாது“ - ஆளுநர் RN ரவி கருத்து

x

தமிழ் மீது ஹிந்தியை திணிக்க முடியாது

ஹிந்தி மொழியை விட தமிழ் மொழி மிகவும் பழமை வாய்ந்தது. சமஸ்கிருதம் மட்டுமே தமிழுக்கு நிகரான பழமை வாய்ந்த மொழி. தமிழ் மீது ஹிந்தி உட்பட எந்த மொழியையும் திணிக்க முடியாது.

தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை கற்றுக்கொண்டு, தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மாணவர்களுக்கு பாராட்டுக்கள்.

இந்தியாவின் ஆன்மீகம் மற்றும் கலாச்சார தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. தமிழ்நாட்டுக்கு 3500 ஆண்டுகளுக்கு மட்டுமல்ல அதற்கும் முந்தைய வரலாறு உண்டு.

தமிழ் இல்லாமல் பிறமொழி பேசுபவர்கள் தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தை கற்றுக் கொள்ள நினைப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.

தமிழை ஆழமாக படிக்க வேண்டும்.தமிழில் அறிஞர்களாக மாற வேண்டும்.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் பயிலும் மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திற்கு வரவழைத்து ராஜ் பவன் சார்பில் அவர்களுக்கு தமிழ் தரிசனம் நிகழ்ச்சி பாரம்பரியமாக இனி நடத்தப்படும்.

2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையான வளர்ச்சி அடைந்த நாடாகவும்,உலகிற்கு தலைமை ஏற்கும் நாடாகவும் இந்தியா விளங்கும்.

- ஆளுநர் ரவி


Next Story

மேலும் செய்திகள்