கீழ்பவானி வாய்க்காலில் உடைப்பு.. சிக்கிய 30 ஊழியர்கள்..கயிறு கட்டி மீட்பு | Erode | Flood | Canal
கீழ்பவானி வாய்க்காலின் இரு கரைகளிலும் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதால், தனியார் மில்லில் சிக்கிய 30 பேரில் 7 பேர் கயிறு கட்டி மீட்கப்பட்டுள்னர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழ்பவானி வாய்க்காலின் வலதுகரை, இடதுகரை என இரு கரைகளிலும் உடைப்பு ஏற்பட்டது. இதனால், நெல், கரும்பு, வாழை போன்ற 500 ஏக்கர் பரப்பளவிலான பயிர்களை தண்ணீர் மூழ்கின. இதனிடையே, பாளையம் பிரிவு நந்தா கல்லூரி பின்புறம் உள்ள ஒரு தனியார் துணி உற்பத்தி மில்லில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், வெள்ளத்தால் சூளப்பட்டனர். இதையடுத்து, தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று, கயிறு கட்டி தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 7 மீட்கப்பட்ட நிலையில், இரவு நேரம் என்பதால் மீட்புப் பணி நிறுத்தப்பட்டுள்ளது. மற்ற 23 பேரும் பத்திரமாக இருப்பதாகவும், காலையில் மீட்புப் பணி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.