ஜூனியர் கால்பந்து போட்டிகளில் வெற்றி பெற்று திரும்பிய வீரர்களின் உயிரை பறித்த பாலம்
பிரேசிலில் ஜூனியர் கால்பந்து அணி சென்ற பேருந்து பாலத்தில் இருந்து கவிழ்ந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
விலா மரியா என்ற ஜூனியர் கால்பந்து அணியினர், தேசிய கால்பந்து போட்டியில் வெற்றி பெற்றுவிட்டு, பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
மினாஸ் கெரைஸ் நகரின் அலெம் பரைபா பகுதியில் சென்று கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து 10 மீட்டர் பள்ளத்தில் தலைக்குப்புற விழுந்தது.
இதில், உடல் நசுங்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அவர்கள் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களாவர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story