நெற்றியில் இறங்கி வரும் பெருமூளை... ஆசை மகனுக்கு வந்த கொடிய நோய் - ஏழை பெற்றோர் கண்ணீர் கோரிக்கை

மூளை சரிவு நோயால் அவதிப்படும் மகனுக்கு வசதியின்மையால் முறையான சிகிச்சை அளிக்க முடியாமல் பெற்றோர் அவதியுற்று வருகின்றனர்...
x

தஞ்சை சோமேஸ்வரபுரத்தைச் சேர்ந்த வாசுதேவன்-பூஜா தம்பதிக்கு, ஆதேஷ், அனிருத் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்... ஊராட்சி ஒன்றிய பள்ளியில் 1ம் வகுப்பு பயிலும் 5 வயதான ஆதேஷுக்கு பிறக்கும் போதே நெற்றியில் கட்டி இருந்தது. இக்கட்டி நாளடைவில் வளர்ந்து பெரிதாகி உள்ளது. நெற்றியில் துவாரம் இருப்பதால், அதன் வழியாக பெருமூளை இறங்கி, கட்டியாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்... அரசு மருத்துவமனையில் காண்பித்த போது, மூளை வளர்ச்சி பாதிப்பு என்பதால், இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது எனக் கூறியதாக தெரிகிறது. தனியார் மருத்துவமனையில் 5 லட்ச ரூபாய் செலவாகும் எனவும் தெரிவித்துள்ளனர். முடிதிருத்தும் தொழிலாளியான வாசுதேவனும் விபத்தில் ஏற்பட்ட காயத்தால் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் நிலையில், நூறு நாள் வேலை மூலம் வருவாய் ஈட்டும் பூஜாவால் மகனின் மருத்துவ செலவுக்கு பணம் திரட்ட முடியவில்லை. தந்தை வாசுதேவனும், தாய் பூஜாவும் பல முறை ஆட்சியர் அலுவலகத்தில் மகனின் சிகிச்சைக்காக நிதி உதவி கோரி மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தனது மகனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என ஏழை பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்