செல்ஃபி வீடியோ வெளியிட்டு காதலன் தற்கொலை...போலீசார் தீவிர விசாரணை

x

ரங்காரெட்டி மாவட்டம் பத்வேலை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். காவல்துறை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள இவர், பயிற்சிக்கு செல்ல தயாராகி வந்தார். இதனிடையே, தேஜஸ்வி என்ற பெண்ணும், பிரவீனும் காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், தேஜஸ்வி வேறொரு நபரை காதலிப்பதாகவும், அவரைதான் திருமணம் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரவீன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்னதாக, செஃல்பி வீடியோ வெளியிட்ட அவர், தனது தற்கொலைக்கு காரணமான தேஜஸ்வி, அவரது நண்பர்கள் மற்றும் தற்போதைய காதலன் ஆகியோர் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு இடையே, பிரவீனின் உடலை கைப்பற்றி, போலீசார் விசாரித்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்