ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்த சிறுவன் உயிரிழப்பு - நீதி கேட்டு காங்கிரஸ் சார்பில் போராட்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மெதுகும்மல் பகுதியில், ஆசிட் கலந்த குளிர்பானம் குடித்து சிறுவன் உயிரிழந்த நிலையில், நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். மெதுகும்மல் பகுதியைச் சேர்ந்த சுனில் என்பவரது 11 வயது மகன் அஸ்வின், கடந்த மாதம் 24ஆம் தேதி குளிர்பானம் குடித்த நிலையில், காய்ச்சல் ஏற்பட்டு கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இரண்டு சிறுநீரகமும் செயலிழந்ததை அடுத்து, சிறுவன் குடித்த குளிர்பானத்தில் ஆசிட் கலந்தது தெரியவந்தது. இந்நிலையில், 23 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்தான். இதனிடையே, சிறுவனின் உடலை வாங்க மறுத்து அதங்கோடு சந்திப்பில் உறவினர்கள், காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
Next Story