சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடித்துக் கொல்லப்பட்ட சிறுவன்... சிறுவனின் தாய்க்கு ரூ.10 லட்சம் இழப்பீட்டுத் தொகை

x

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தனது மகனின் இறப்புடன் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்று சிறுவனின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார். இறந்த சிறுவன் கோகுல் ஸ்ரீயின் தாய்க்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதி மற்றும் இழப்பீடு தொகையாக ரூபாய் 10 லட்சம் வழங்கப்பட்டது. தாம்பரம் அன்னை அஞ்சுகம் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரியம் சார்பில் குடியிருப்பு வீடும் வழங்கப்பட்டு ஒதுக்கீட்டு ஆணையை செங்கல்பட்டு ஆட்சியர் ராகுல்நாத் வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோகுல்ஸ்ரீயின் தாய் பிரியா, முதல்வருக்கு நன்றி தெரிவித்ததுடன், தனது மகன் இறப்பில் தொடர்புடைய குற்றவாளிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தார்.


Next Story

மேலும் செய்திகள்