கொடூர வலிகள் தந்த கடந்த காலம்...அறியப்படாத எலான் மஸ்க்கின் மறுபக்கம்...உலகின் நம்பர் 1 பணக்காரரானது இப்படி தான்..!
எளிய குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் உலகின் நம்பர் ஒன் பணக்காரராக உருவெடுத்துள்ள எலான் மஸ்க் பிறந்த தினம் இன்று.....
1971ல் தென் ஆப்பரிக்காவில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த எலான் மஸ்க், 18 வயதில் கனடாவிற்கு புலம் பெயர்ந்து, பின்னர் அமெரிக்காவிற்கு இடம் பெயர்ந்தார்.
அங்கு கல்லூரி படிப்பை முடித்த பின், 1995ல் Zip2 என்ற இணைய தள ஸ்டார்ட் அப் நிறுவனத்தை ஒரு சிறிய அலுவலகத்தில் தொடங்கி கடுமையாக உழைத்து, வெற்றி பெறச் செய்தார்.
அந்த நாட்களில் வீடு எடுக்க போதிய வருமானம் இல்லாததால், அலுலவலத்திலேயே தங்கிக் கொண்டார். 1999ல் இந்நிறுவனத்தை காம்பேக் நிறுவனம் வாங்கிய போது, அவருக்கு 2.2 கோடி டாலர் கிடைத்தது.
அதன் பிறகு எக்ஸ்.காம் நிறுவனத்தை தொடங்கி பெரிய அளவில் வளர்ந்தார். இதில் ஈட்டிய பெரும் தொகையை கொண்டு 2002ல் ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி பெரும் சாதனை படைக்கும் நிறுவனமாக வளர்த்தெடுத்தார்.
வரலாற்றிலேயே முதல்முறையாக மனிதர்களை அனுப்பும் முதல் தனியார் நிறுவனம் எனும் பெருமையை 2021ல் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பெற்றது. அமெரிக்க அரசின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இணையாக, போட்டியாக அவரின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வளர்ந்து வருகிறது.
2003ல் டெஸ்லா என்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனத்தில் முதலீடு செய்து, உலகின் மிகப் பெரிய மின்சார கார் தயாரிப்பு நிறுவனமாக அதை வளர்த்தெடுத்தார்.
2016ல் நியுராலிங் நிறுவனத்தை தொடங்கி, மனித மூளையில் கம்யூட்டர் சிப்புகளை பொருத்தி, பல்வேறு நோய்களுக்கு தீர்வு கண்டு பிடிக்க வகை செய்தார்.
2022ல் நஷ்டத்தில் இயங்கிய டிவிட்டர் நிறுவனத்தை 4,400 கோடி டாலருக்கு வாங்கி, அதை சீர் செய்து வருகிறார். தற்போது அவரின் சொத்து மதிப்பு 21,900 கோடி டாலராக அதிகரித்து, உலக பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் தொடர்கிறார்.
அசுர சாதனை படைத்து வரும் எலான் மஸ்க் பிறந்த தினம், 1971, ஜூன் 28.