ஆவின் பால் ஊழியர்களுக்கு போனஸ்

x

மதுரை ஆவின், 3 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு, பால் உற்பத்தியாளர்களுக்கு போனஸ் வழங்கி உள்ளது. இது குறித்து மதுரை ஆவின் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற நிதியாண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2 லட்சத்து 7 ஆயிரத்து 780 லிட்டர் பால் கொள்முதல் செய்து, 1 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் பால் மற்றும் பால் உபபொருட்கள் விற்பனை செய்து, மொத்தம் 13 கோடியே 71 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த லாபத்தில் பால் உற்பத்தியாளர்களுக்கு 3 கோடியே 75 கோடி போனஸ் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் 18 ஆயிரத்து 50 பேர் பயன் பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்