"வெடிகுண்டு கலாச்சாரத்தை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும்" - கமல் காட்டம்

x

வன்முறை கலச்சாரத்தை அனுமதிக்காமல், தமிழக அரசு சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நிர்வாகிகள் வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவங்கள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் காந்தி ஜெயந்தியை ரத்தத்தால் கொண்டாட நினைப்பவர்களை வன்மையாக எதிர்ப்பதாக தெரிவித்த அவர், எந்தச் சூழலிலும் தமிழக மண்ணில் வன்முறைக் கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம் என்றார்.

அமைதிப் பூங்கா என பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்