கொதிக்கும் பூமி...அதிகரிக்கும் வெப்ப நிலை.."2100களில் ஆண்டுக்கு 90ஆயிரம் ஐரோப்பியர்கள் பலியாவார்கள்"
உலக வெப்ப மயமாதலுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும், எடுக்கப்படாமல் 3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு பூமியின் வெப்ப நிலை உயரும் பட்சத்தில் 2 ஆயிரத்து 100ம் ஆண்டு வாக்குகளில் ஆண்டுக்கு 90 ஆயிரம் ஐரோப்பியர்கள் வெப்ப அலையால் இறக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் புவி வெப்ப நிலை 1.5 டிகிரி செல்சியஸில் இருந்தால் இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரமாகக் குறையும் என்று ஆய்வு முடிவுகள் குறிப்பிட்டுள்ளன.
1980 முதல் 2020 காலகட்டத்திற்குள் மட்டும் அதீத வெப்பத்தால் சுமார் 1 லட்சத்து 29 ஆயிரம் ஐரோப்பியர்கள் உயிரிழந்துள்ளனர்
அதே சமயம் அதீத வெப்பத்தால் இந்த ஆண்டு மட்டும் ஐரோப்பாவில் சுமார் 15 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story