இறந்து 2 வாரங்களுக்கு பின் அடக்கம் செய்யப்பட்ட சிறுமியின் உடல்
குளித்தலை அருகே மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்ட சிறுமியின் உடல், 14 நாட்களுக்கு பின் அடக்கம் செய்யப்பட்டது.
கரூர் மாவட்டம் சவாரிமேடு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியின் தாயார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் தனது மகள் கடந்த மே மாதம் கிணற்றில் சடலமாக கிடந்ததாகவும், திருச்சி அரசு மருத்துவமனையில் விதிகளை பின்பற்றாமல் பிரேத பரிசோதனை செய்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் விதிகளை பின்பற்றி மறுபிரேத பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கூறியிருந்தார். நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து, மறு பிரேத பரிசோதனை நடத்திய மருத்துவக் குழுவினர், 14 நாட்களுக்கு பிறகு சிறுமியின் உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். பின்பு சிறுமியின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
Next Story