புதுச்சேரியில் நீலக்கடல் திட்டம்.. மத்திய அமைச்சர் தகவல்
புதுச்சேரியின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் நடைபெறும் அரவிந்தரின் 150 வது ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி பங்கேற்க உள்ளார். இதற்காக, விமானம் மூலம் சென்னை வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, புதுச்சேரில் நீலக்கடல் என்கிற திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளதாவும், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் குறித்து புதுச்சேரி முதலமைச்சர் மற்றும் துணை நிலை ஆளுநரிடம் கலந்துரையாட உள்ளதாக கூறினார்.
Next Story