சாலையை மறித்து பாஜக பொதுக்கூட்ட மேடை - போலீசார் அதிரடி | Kanchipuram | BJP | Meeting
ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே, பாஜக சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்திற்கு, மேடை அமைக்கும் பணிகளை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், பஞ்சமி நிலத்திற்கு சிறப்பு சட்டம் இயற்றிட, தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, பாஜக சார்பில் இன்று இரவு பொதுக்கூட்டம் நடைபெறுவதாக உள்ளது. இதனிடையே, பொதுக்கூட்டத்திற்காக மேடை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், சாலையை மறித்து, மேடை அமைப்பதை அனுமதிக்க முடியாது எனக் கூறி, ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் தடுத்து நிறுத்தினார்.
Next Story