"அன்பான மனைவி அமைந்தாலே பேரின்பமே"; மணமேடையில் மணமகனை உருகவைத்த மணப்பெண்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நடைபெற்ற திருமணத்தில் ஜல்லிக்கட்டு காளையுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற மணப்பெண்ணின் ஆசையை மணமகனின் நண்பர்கள் மணமேடையில் நிறைவேற்றினர். அணைக்கரைபட்டி பகுதியில் மாடுபிடி வீரரான அழகுமுனிக்கும் - கனகலட்சுமிக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் மணமகன் ஜல்லிக்கட்டு காளை மீது அதிக பிரியம் கொண்டவர் என்பதால் ஜல்லிக்கட்டு காளையுடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என மணப்பெண் ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து காளையை மேடைக்கு அழைத்து வந்த மணமகனின் நண்பர்கள், காளையுடன் புகைப்படம் எடுக்க வைத்து மணப்பெண்ணின் ஆசையை நிறைவேற்றி உள்ளனர்.
Next Story