மகளை திருமணம் செய்து வைக்குமாறு கள்ளக்காதலன் பகீர் மிரட்டல் - தந்திரமாக செயல்பட்ட சிறுமி
திட்டக்குடி அடுத்துள்ள ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், சித்ரா என்ற பெண்ணிடம் தகாத உறவில் இருந்துள்ளார்.
கணவனை இழந்த சித்ராவிற்கு, ஒரு மகன் மற்றும் 15 வயதில் ஒரு மகள் உள்ளார்.
இந்த நிலையில், சித்ராவின் வீட்டிற்கு வந்த செந்தில், அவரது 15 வயது மகளை திருமணம் செய்து வைக்கச் சொல்லி, தாயையும், மகளையும் மிரட்டியதுடன் அத்துமீறலிலும் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, வீட்டிலிருந்து புத்திசாலித்தனமாக தப்பித்த சிறுமி, பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் தடுப்புப் பிரிவிற்கு போன் செய்து, புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார், செந்திலை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
Next Story