கருப்பு நிறத்தில் வரும் தண்ணீர்...குவியல் குவியலாக ரசாயன நுரை - கெலவரப்பள்ளி அணையின் அவலம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணையில் குவியல் குவியலாக ரசாயன நுரைகள் மிதப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்நிலையில், கர்நாடகாவில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து ரசாயண கழிவுகள் ஆற்றில் கலக்கப்படுவதால், கெலவரப்பள்ளி அணையில் பல அடி உயரத்திற்கு நுரைகள் மிதந்து செல்கின்றன. மேலும், தண்ணீர் கருப்பு நிறத்தில், துர்நாற்றம் வீசுவதால் சுற்றுவட்டார கிராம மக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
Next Story